×

"உங்க ஆட்சி தான் முடிஞ்சிருச்சே.. இப்போ இவரு தான் CM"- மேயர் அறையில்  முதல்வர் விஜய்  படத்தை வைக்க மறுப்பு

 

ஈரோடு மாநகராட்சி மேயர் அறையில் முதலமைச்சர் படத்தை வைக்க படத்துடன் வந்த தவெகவினருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேயரின் தனி அறையில் முதலமைச்சர் படம் வைப்பது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக மேயர் கூறியதை தொடர்ந்து தவெகவினர் மேயர் அறையில் இருந்து வெளியேறினர். 

ஈரோடு மாமன்ற கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டத்திற்கு முன் தவெக நிர்வாகிகள் மற்றும் அதிமுக.வில் இருந்து தவெகவில் இணைந்த கவுன்சிலர்கள், முதலமைச்சர் விஜய் படத்துடன் மேயரின் தனி அறைக்கு வந்தனர். அங்கு முதலமைச்சரின் படத்தை வைக்க முற்பட்டனர். அப்போது அங்கிருந்த திமுக கவுன்சிலர்களும், மேயரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே மாநகராட்சி அலுவலகம் கவுண்ட்ஸ் ஆணையர் அறை மாமன்ற கூட்ட அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சரின் புகைப்படம் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மேயரின் தனி அறையில் தேவையில்லை என கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு வாரத்தில் முடிவு செய்வதாக மேயர் அளித்த உறுதி மொழியை அடுத்து தவெக.வினர் முதலமைச்சரின் படத்தை வைக்காமல் திரும்பிச் சென்றனர்.