×

நீங்க மெழுவர்த்தியை வாங்காதீங்க... தவெக எம்.எல்.ஏவை உதாசீனப்படுத்திய மேயர் பிரியா!

 

சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ரூ.2.20 கோடியில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில் மேயர் பிரியா மற்றும் எம்.எல்.ஏ பல்லவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திரு.வி.க நகரில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி கட்டிடம் திறப்பு விழாவில், மாநகராட்சி மேயர் மற்றும் திரு.வி.க நகர் தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்டிட திறப்பு விழாவில் ஒரு ரிப்பனை வெட்ட இரண்டு பேரும் முன்டியடித்து ஆர்வம் காட்டினர். பிறகு இருவரும் கையில் ஆளுக்கொரு கத்திரிக்கோலை வைத்து கொண்டு வெட்டினர். அடுத்த நிகழ்ச்சியில் மேயருக்கு பிறகு குத்துவிளக்கு ஏற்ற எம்.எல்.ஏ கையை நீட்டுகிறார். ஆனால் பிரியா அவருக்கு மெழுகுவர்த்தியை வழங்காமல் அதிகாரிகளுக்கு வழங்குகிறார். பிறகு மற்றொரு பள்ளி நிகழ்ச்சியில் அதே பிரியா, MLA-விடம் மெழுகுவர்த்தி கொடுத்ததும், சுயமரியாதை காரணமாக MLA அதை வாங்காமல் பின்வாங்கினார்.

குத்துவிளக்கு ஏற்ற மெழுகுவர்த்தியை தர மறுத்த மேயர் பிரியா...சட்டென தவெக MLA செய்த செயல்..!!#MayorPriya #TVKMla #MayorvsMLA #MLAPallavi #DMKvsTVK #GovtSchool #Newstamil24x7 pic.twitter.com/ubdHGa8bri

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) June 4, 2026


இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ப்ரோட்டோகால் படிதான் நிகழ்ச்சியில் குத்துவிளக்கை ஏற்றினோம், முதலில் ஐஏஎஸ், பிறகுதான் எம்.எல்.ஏ விளக்கை ஏற்ற வேண்டும், அதற்குள் அவர்கள் கோபித்துக்கொண்டார்கள், என மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் விஜயை மேயர் பிரியா இதுவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. பள்ளி கட்டிடம் திறப்பு நிகழ்ச்சியின் போது குத்துவிளக்கேற்றவிடாமல் தன்னை மேயர் தடுத்ததாக தவெக எம்.எல்.ஏ பல்லவி குற்றஞ்சாட்டியுள்ளார். மேயர் ப்ரியா திட்டமிட்டே அவமதித்தார், நான் பங்கேற்பது தெரிந்து கடைசி நேரத்தில் மேயர் வந்தார் என பல்லவி கூறியுள்ளார்.