"மாணவர்களுக்கு தொடர் 3 நாட்கள் லீவ்!" – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில் முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும்.
எனினும், இவ்விடுமுறை உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881) இதன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் வங்கிகள் செயல்படும்.
இந்த உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் விதமாக வரும் 21ம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவித்தும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 16ம் தேதி விடுமுறை திங்கள் கிழமை வருவதால் அதற்கு முந்தைய நாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருவதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. தீபாவளி விடுமுறையை போன்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றனர்.