#Election2024 மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.
Mar 26, 2024, 21:38 IST
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் பத்து தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில் மயிலாடுதுறை தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது காங்கிரஸ் தலைமை.
இந்நிலையில் தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது ஏழாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
அதில் தமிழகத்தில் மயிலாடுதுறை தொகுதியில் வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.