×

சிறு, குறு தொழில்களுக்கான மின் உச்ச வரம்பு 150 கிலோ வாட்டாக அதிகரிப்பு!

சிறு, குறு தொழில்களுக்கான மின் உச்ச வரம்பை 150 கிலோ வாட்டாக தமிழக அரசு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சிறு குறுதொழில்களுக்கான மின் உச்ச வரம்பு 112 கிலோ வாட்டாக இருந்து வந்தது. ஆனால், தேவை அதிகரித்ததால் மின் வரம்பை அதிகப்படுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை பரிசீலித்த அரசு, மின் வரம்பை 150 கிலோ வாட்டாக அதிகரித்து,தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை மின்சார வழங்கல் விதித்தொகுப்பில் திருத்தம் செய்துள்ளது. மேலும், இதன் முக்கிய அம்சங்களையும் வெளியிட்டுள்ளது. அதாவது தேவை
 

சிறு, குறு தொழில்களுக்கான மின் உச்ச வரம்பை 150 கிலோ வாட்டாக தமிழக அரசு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சிறு குறுதொழில்களுக்கான மின் உச்ச வரம்பு 112 கிலோ வாட்டாக இருந்து வந்தது. ஆனால், தேவை அதிகரித்ததால் மின் வரம்பை அதிகப்படுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை பரிசீலித்த அரசு, மின் வரம்பை 150 கிலோ வாட்டாக அதிகரித்து,தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை மின்சார வழங்கல் விதித்தொகுப்பில் திருத்தம் செய்துள்ளது. மேலும், இதன் முக்கிய அம்சங்களையும் வெளியிட்டுள்ளது.

அதாவது தேவை இருப்பவர்கள் 150 கிலோ வாட் வரையில் நிபந்தனைகளுடன் மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மின்கடத்திகளுக்கான நிறுவுதல் செலவை விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும் என்றும் மின் உச்ச வரம்பை மீறினால் நுகர்வோர்களுக்கு ஒரே மாதிரியான அபராதத்தொகை வசூலிக்கப்படும் என்றும் மின் வரம்பை 3 முறை மீறினால் உயரழுத்த மின்னிணைப்பாக மாற்ற அறிவிப்பு கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 112 கிலோ வாட் மேல் மின்சாரம் உபயோகித்து அபராதம் செலுத்தி வந்தவர்கள் 150 கிலோ வாட் வரை உபயோகித்து அபராதத்தை தவிர்க்கலாம் என்றும் நுகர்வோர் இடத்திலேயே மின்மாற்றியை அமைத்தால் மின் இழப்பு குறையும் என்றும் மற்ற விவரங்களை www.tnerc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.