×

அழகு முத்துகோனின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி கொண்டாடுவோம் - தினகரன் 

 

அழகு முத்துகோன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி கொண்டாடுவோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தாய் மண்ணின் உரிமைக்காகவும், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் தன் உயிரை தியாகம் செய்து இந்திய விடுதலைக்கு வித்திட்ட கட்டாலங்குளத்து மாவீரர் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

மானம் இழந்து வாழ்வதை விட மரணிப்பதே மேல் என முழங்கி ஆங்கிலேயர்களை எதிர்த்த சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துகோன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.