ஏப்.12ம் தேதி முதல் தீப்பெட்டி ஆலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு
தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக வரும் 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகள் மூடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் 400 மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகிறது இந்த தீப்பெட்டி தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 90% பெண்களே பணிபுரிந்து வருகின்றனர்.
தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருள்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்துப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தீப்பெட்டி மூலப்பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. மெழுகு, அட்டை, பாலித்தீன் பேக் ஆகியவை ஈரானில் இருந்து தான் வந்து கொண்டிருந்தது தற்போது போர் காரணமாக அவை வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இந்த மூலப் பொருட்களை ஸ்டாக் வைத்துள்ள நிறுவனங்கள் போரை காரணம் காட்டி விலையை கடுமையாக உயர்தியுள்ளதாகவும் ஒரு கிலோ மெழுகு 80 ரூபாய்க்கு கடந்த சில மாதங்கள் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 150ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தீப்பெட்டி பண்டல்கள் பேக்கிங் தேவையான பாலித்தீன் பைகள் ரகம் வாரியாக ஒரு கிலோ ரூ. 60 முதல் ரூ. 100வரை உமர்ந்துள்ளது. இதே போன்று பாஸ்பரஸ், குளோரைட், பேப்பர், அட்டை என அனைத்து மூலப்பொருட்கள் விளையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் நிலை உள்ளது.
இதனால் தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் இதனால் வரும் 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகள் மூடப்படுவதாகவும் கூறியுள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தீப்பெட்டி ஆலைகள் மூடப்படுவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும் இது குறித்து மாநில அரசு உடனடியாக தடை தலையிட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்களை கண்டுபிடித்து விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.