இண்டிகோ விமானத்தில் பயங்கர தீ விபத்து
200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டு வந்த இண்டிகோ விமானத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டு வந்த இண்டிகோ விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் லக்கேஜ் வைத்திருக்கும் இடத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இருப்பினும் விமானம் முழுவதும் புகை பரவியதால் பயணிகள் அலறிய நிலையில், பணியாளர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். நடுவானில் தீ விபத்து ஏற்பட்டதால் சென்னைக்கு வர வேண்டிய விமானம் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இருந்து இன்று பகல் 1.30 மணிக்கு கிளம்பிய இண்டிகோ விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டது. விமானத்தில் பயணிகள் பேக்கில் இருந்த பவர் பேங்க் வெடித்ததே தீவிபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.