☰
×

Guidance TN பணியாளர்கள் கூண்டோடு ராஜினாமாவா?- தமிழக அரசு விளக்கம் 

 

தமிழ்நாட்டில் Guidance Tamil Nadu 2026 ஜூலை மாதத்தில் கூட்டாக பணியாளர்கள் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN  முகமையில் பணியாற்றி வந்த  15 பேர்  முதலீட்டாளர்கள் குறித்த தகவல்களை  பிற மாநிலங்களுக்கு கசிய விட்டதாகவும், அதனால்  அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும்  செய்திகள் வெளியாகின. தமிழகத்தின் முதலீடு ஈர்ப்பு கட்டமைப்பையே நிலைகுலையச் செய்யும் இந்த விவகாரம் குறித்து  யூக செய்திகள் மட்டுமே வெளிவரும் நிலையில், அரசு எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதி காத்தது சர்ச்சை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் Guidance Tamil Nadu 2026 ஜூலை மாதத்தில் கூட்டாக பணியாளர்கள் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எந்த நிறுவனத்திலும் பணியாளர்கள் வேலையை மாற்றுவது இயல்பான நிகழ்வாகும். தனிப்பட்ட காரணங்கள், சிறந்த தொழில் வாய்ப்புகள், உயர்கல்வி, பணியிட மாற்றம் மற்றும் குடும்பக் காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணியாளர்கள் வெளியேறுவது வழக்கமான ஒன்றே என கைடன்ஸ் தமிழ்நாடு தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு தனது அண்டை மாநிலங்களுடன் எப்போதும் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டியைப் பேணி, இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்து வருகிறது. தமிழ்நாடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இருவருக்கும் விருப்பமான முதலீட்டு இடமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது என தொழில்துறை விளக்கம் அளித்துள்ளது.