×

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மாஸ்க்கை அழிக்ககூடிய எரியூட்டி இயந்திரம் பொருத்தம்?!

தமிழிகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவிக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 1,982 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்று 1,479 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 28,904 ஆகஅதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் அதிகஅளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சென்னையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக்
 

தமிழிகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவிக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 1,982 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்று 1,479 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 28,904 ஆகஅதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் அதிகஅளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சென்னையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள மாஸ்க் அணியுமாறும், சமூக விலகலை கடைபிடிக்குமாறும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் பயன்படுத்தப்பட்ட மாஸ்க் மூலமாகவும் கொரோனா பரவும் என்று கூறப்படுவதால் அதனை எரிக்கும் 5 எரியூட்டி இயந்திரங்களை ஹூண்டாய் நிறுவனம் அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. அந்த எரியூட்டி இயந்திரங்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட அரசின் தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.