மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நாளில் போற்றி வணங்குவோம் - தினகரன் ட்வீட்!!
Oct 24, 2023, 14:25 IST
மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நாளில் போற்றி வணங்குவோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சுதந்திர இந்தியாவை உருவாக்க ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சியை ஒன்றிணைத்து, முதல் போர்ப் பிரகடனம் அறிவித்து, வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த, மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக வாளேந்தி போரிட்டதோடு மத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நாளில் போற்றி வணங்குவோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.