×

இ-பதிவு இணையதளத்தில் திருமணம் பிரிவு மீண்டும் நீக்கம்!

கொரனோ பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் திருமணம் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே பாஸ் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் நடைபெறுகிறது. இ பாஸ் பதிவில் திருமணம் என்ற பிரிவை அரசு நேற்று திடீரென நீக்கியது. அந்த பிரிவை மக்கள் பலர் தவறாக பயன்படுத்துவதாகவும் அதிகமான மக்கள் அதன் மூலம் பாஸ் எடுத்துக்கொண்டு வெளியே வருவதாகவும்
 

கொரனோ பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் திருமணம் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே பாஸ் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் நடைபெறுகிறது.

இ பாஸ் பதிவில் திருமணம் என்ற பிரிவை அரசு நேற்று திடீரென நீக்கியது. அந்த பிரிவை மக்கள் பலர் தவறாக பயன்படுத்துவதாகவும் அதிகமான மக்கள் அதன் மூலம் பாஸ் எடுத்துக்கொண்டு வெளியே வருவதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், உண்மையிலேயே திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக செல்லும் மக்களின் நிலை கேள்விக்குறியானதையடுத்து இணையதளத்தில் திருமணம் என்ற பிரிவு இன்று காலை மீண்டும் சேர்க்கப்பட்டது,

இந்த நிலையில், தற்போது மீண்டும் திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை சேர்க்கப்பட்ட திருமணம் பிரிவு மீண்டும் நீக்கப்பட்டிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.