×

மெரினா நீச்சல் குளம் ஜுலை 11 முதல் மூடல்

 

சென்னை மெரினா நீச்சல் குளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், 11.07.2025 முதல் 31.07.2025 வரை (20 நாட்கள்) இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு- 114க்குட்பட்ட மெரினா நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தங்குதடையின்றி இயங்க ஏதுவாக, 135 மீ. Backwash Pipe அமைத்தல், 180 மீ. விட்டம் கொண்ட 9 ஊறுகுழிகள் (Soak Pits) பொருத்துதல், சோதனை வெள்ளோட்டம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பணிகளுக்காக மெரினா நீச்சல் குளம் 11.07.2025 முதல் 31.07.2025 வரை (20 நாட்கள்) இயங்காது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.