×

நியூஸ் 18-க்கு எதிரான அவதூறுகளை வெளியிட மாரிதாசுக்கு தடை! – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு எதிராக பா.ஜ.க ஆதரவு யூடியூப் பிரபலம் மாரிதாஸ் அவதூறு செய்திகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் தொடர்பாக பா.ஜ.க ஆதரவாளர் மாரிதாஸ் யூடியூபில் வீடியோ வெளியிட்டார். அங்கு பணியாற்றுபவர்கள் மீது அந்த நிறுவனத்தின் தலைமையிடம் புகார் கூறியதாகவும், நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் இ-மெயில் செய்ததாகவும் வீடியோவில் கூறியிருந்தார். அந்த இ-மெயில் போலியானது என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாரிதாஸ் மீது
 

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு எதிராக பா.ஜ.க ஆதரவு யூடியூப் பிரபலம் மாரிதாஸ் அவதூறு செய்திகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் தொடர்பாக பா.ஜ.க ஆதரவாளர் மாரிதாஸ் யூடியூபில் வீடியோ வெளியிட்டார். அங்கு பணியாற்றுபவர்கள் மீது அந்த நிறுவனத்தின் தலைமையிடம் புகார் கூறியதாகவும், நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் இ-மெயில் செய்ததாகவும் வீடியோவில் கூறியிருந்தார். அந்த இ-மெயில் போலியானது என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாரிதாஸ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.


ஆனால் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ள சென்னை போலீசார், அவருக்கு போலியான மின்னஞ்சலில் இருந்து பதில் அனுப்பியவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதனால், புகார் கொடுத்தும் பயனில்லை என்ற நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நியூஸ் 18 தரப்பிலும், அதன் ஆசிரியர் குணசேகரன் தரப்பில் தனியாகவும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மாரிதாஸ் ரூ.1.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று குணசேகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். நியூஸ் 18 தாக்கல் செய்த மனுவில், “மக்களிடையே மதப் பிளவு ஏற்படுத்தும் வகையிலும், செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்” எனக் கூறப்பட்டு இருந்தது.


இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. நியூஸ் 18 தரப்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “மாரிதாஸ் இதுவரை நியூஸ் 18 தமிழ்நாடு தொடர்பாக வெளியிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும். தனி நபர் யாராக இருந்தாலும், நியூஸ் 18 தொலைக்காட்சி குறித்து ஆதாரமற்ற செய்திகளை வெளியிட கூடாது. வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் மாரிதாஸ் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.