☰
×

"பொது வேட்பாளர் சீமானா? வேடிக்கையா இருக்கு"- அமைச்சர் மரிய வில்சன்

 

சீமான் விமர்சித்து பேசியதை திமுகவும், அதிமுகவும் மறந்திருக்காது என அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார். 

அம்பாசமுத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், "திராவிடக் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்ததை சீமான் மறந்திருக்கலாம்.  இரு கட்சிகளுமே சீமானை  ஏற்க வாய்ப்பில்லை.. தற்போது அவர்களிடம் கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் சீமான். பொது வேட்பாளராக சீமானை களமிறக்கப் போகிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது. திராவிடம் குறித்து சீமான் பேசியதை எல்லாம் திமுக-வும் அதிமுக-வும் மறந்திருக்க மாட்டார்கள் அதிமுக-விடமும் திமுக-விடமும் இப்போது உதவி கேட்பது சீமான் தான்.  

எந்தவொரு அஜெண்டாவையும் வைத்துக் கொண்டு முதலமைச்சர் மக்களை சந்திக்கவில்லை. ஒரு மாநில முதலமைச்சராக எந்த நேரத்திலும் மக்களை சந்திக்க அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.  அவங்க கிட்ட சொல்லிட்டு தான் போகணுமா..மக்களை சந்திப்பது  முதல்வரோட விருப்பம்.. அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் இரண்டு பேருக்கு தான் போட்டியே ஒண்ணு DMK- மற்றொன்று  TVK அவ்வளவு தான்.. நடுவில் இருப்பவர்களுக்கு போட்டி இல்லை. மாற்றவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடையாது. அவர்கள் கனவு உலகத்தில் வாழட்டும்" என்றார்.