×

மார்ச் 3,4-ம் தேதி கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா

 

கச்சத்தீவு புனித அந்தோணியார்  ஆலய திருவிழா மார்ச் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள இந்திய பக்தர்கள் சுமார் 2,281 செல்ல உள்ளனர் .

இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி ஜாம் வர்கிஸ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை இந்திய கடலோர காவல் படை கமாண்டர்  தலைமையில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய  திருவிழா பாதுகாப்பாக செல்லுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரத்தில் இருந்து செல்லக்கூடிய பக்தர்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திலிருந்து மட்டுமே செல்ல வேண்டும், படகில் செல்லும் நபர்கள் தவிர்த்து வேறு நபர்கள் யாரும் இலங்கையில் இருந்து அழைத்து வரக்கூடாது. 

இதேபோன்று சட்டவிரோத செயல்பாடுகளில் உள்ளவர்களை படகுகளில் ஏற்றக்கூடாது படகில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பை கச்சத்தீீவு அந்தோணியார் திருப்பயணகுழுவினர் சரியாக மேற்கொள்ள வேண்டும்  குறிப்பிட்ட இடத்தை தவிர்த்து மற்ற பகுதியில் இருந்து திருவிழா பயணம் மேற்கொள்ளக்கூடாது என  மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி  டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை கச்சத்தீவு புனித அந்தோணியா் ஆலய திருவிழா ஒருங்கிணைப்பு குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு 60 விசைப்படகுகள் 12 நாட்டு படங்களில் சுமார் 2281 பேர் கச்சத்தை திருவிழாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 845 பேர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 1310 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 126 பேர் என மொத்தம் 2281 பேர் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்ல உள்ளனர்.