×

“நாங்களும் இளைஞர் படையை இறக்குவோம்ல”- கெத்துக்காட்டும் இபிஎஸ்

 

சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்முறையாக தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடியில் உள்ள அரசு பயணியர் மாளிகையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அவரது வருகையை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், மாலைகள் அணிவித்தும், முழக்கங்களை எழுப்பியும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு அளித்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அமமுக முன்னாள் சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவருமான பூக்கடைசேகர், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, எடப்பாடி அதிமுக நகர செயலாளர் முருகன் தலைமையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துகளை தெரிவித்தார்.