“வரலாறு எழுத பலர் வருவார்கள். வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்”- உடுமலை ராதாகிருஷ்ணன்
Jul 6, 2026, 19:31 IST
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து, புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தவெக தலைவர், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம் என உடுமலை ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் தவெகவில் இணைந்த உடுமலை ராதாகிருஷ்ணன் தனது முகநூலில், “வரலாறு எழுத பலர் வருவார்கள்… வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து, புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்! வெற்றித் தலைவர் பாதையில்… மக்களுக்கான பயணம்… அதே உறுதியோடு தொடரும்! ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.