அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு
May 10, 2026, 13:51 IST
CV சண்முகம், வேலுமணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில், அதனைத் தொடர்ந்து சில நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தை சந்திக்க வருகை புரிந்துள்ளனர். சென்னை எம்.ஆர்.சி. நகரில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் இருவரும் நிர்வாகிகளுடன் தனியே ஆலோசனை நடத்திவருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க நாளை சட்டப்பேரவை கூட இருக்கும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தால் தொண்டர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர். தனித்தனியாக ஆலோசனை நடத்துவது மீண்டும் ஒரு பிளவுக்கு வழிவகுத்து விடுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.