×

"என் மீது அவதூறு பரப்பவே மகன் மீது வழக்கு"- நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

 

ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு, என்ன நடப்பது என தெரியாமல் வழக்கு பதிவு செய்ய சொல்வது நியாயமா? என நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “என் மீதும், என் மகன் மீதும் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். புகார் அளித்தால் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறார்கள். விசாரணை மேற்கொள்ளாமல், எனது மகன் துக்ளக் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது, எனது மகனுடன் பழகிய அனைவருக்கும் தெரியும், அவன் எவ்வாறு பேசுவான் என்று... கஞ்சா அடித்தார் என தெரிந்தவுடன் எனது மகனை நானே அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். தவறு செய்யும் பட்சத்தில் ஒரு தந்தையாக நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன். காவல்துறை என் மகன் மீது பதிந்துள்ள  வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்குப்பதிவு சம்பந்தமாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு, என்ன நடப்பது என தெரியாமல் வழக்கு பதிவு செய்ய சொல்வது நியாயமா? என் மீது அவதூறு பரப்பவே மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நில பிரச்சனை விவகாரத்தில் 35 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தராத நபர் மீது 5 வருடமாக புகார் கொடுத்தும் FIR கூட போடவில்லை” என்றார்.

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக துக்ளக் மீது வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் காவல்துறையினர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.