×

#BREAKING: மன்சூர் அலிகான் ஜாமீன் மனு தள்ளுபடி!

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னர் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்திற்கும் தடுப்பூசி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை தடுப்பூசிக்கும் விவேக்கின் மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தது. ஆனால், விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று கூறி சர்ச்சையை
 

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னர் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்திற்கும் தடுப்பூசி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை தடுப்பூசிக்கும் விவேக்கின் மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தது. ஆனால், விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார் நடிகர் மன்சூர் அலிகான். தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படுமென சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்ததையும் மீறி மன்சூர் அலிகான் இவ்வாறு பேசியது குறித்து டிஜிபி அலுவலகத்திலும் சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் புகாரளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில், தடுப்பூசி குறித்து பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் முழுமையாக இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் புதிய மனு தொடர உத்தரவிட்டனர்.