“பேச்சுவார்த்தையில் யார் கலந்துகொள்ள வேண்டும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் தீர்மானிக்க முடியாது”- மனோ தங்கராஜ்
“பேச்சுவார்த்தையில் யார் கலந்துகொள்ள வேண்டும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் தீர்மானிக்க முடியாது என திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில், “பேச்சுவார்த்தையில் யார் கலந்துகொள்ள வேண்டும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் தீர்மானிக்க முடியாது. யாருக்காக அந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதோ, அவர்கள்தான் தங்களுக்காக யார் பேச வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். செவியலியர் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அரசின் செயலாளர் ஒப்புக்கொண்டபடி நவம்பர் 3-ம் தேதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் போராட்டம் வீரியமடையும். வலுவற்றவர்கள், குரலற்றவர்கள் முன்னெடுக்கும் உரிமைகளுக்கான போராட்டங்களில் அரசமைப்புச்சட்டப் பாதுகாப்பு இயக்கம் உறுதியான அரணாக அவர்கள் பக்கம் நிற்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.