டிடிவி தினகரன் என்ன தியாகியா?- மனோ தங்கராஜ்
எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் இடையே நடந்த பிரச்சனை பங்காளி சண்டை அல்ல, பங்கு வைப்பதில் ஏற்பட்ட சண்டை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு என்றைக்குமே ஒற்றை இஞ்ஜின் தான்.அந்த ஒற்றை இஞ்ஜின் திமுக அரசு தான். அவர்களின் எந்த வித்தையும் இங்கு பலிக்காது. ரெட்டை குழல் துப்பாக்கி என்று சொன்னார்கள். ஒரு குழலை காணவில்லை, மற்றொரு குழல் திக்கு முக்காடி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த வித்தையும் பலிக்காது. நாட்டில் உள்ள ஒரு பிரச்சனை பற்றியாவது பிரதமர் பேசினாரா? குழந்தை திருமணத்தை 2030க்குள் ஒழிப்போம் என்றார்கள், ஆனால் தற்போது கூடி வருகிறது.
வட இந்தியாவில் பள்ளிப்படிப்பை இடைநிற்றல் செய்வது லட்சக்கணக்கில் கூடியுள்ளது. டிடிவி தினகரன் என்ன தியாகியா? எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் இடையே நடந்த பிரச்சனை பங்காளி சண்டை அல்ல, பங்கு வைப்பதில் ஏற்பட்ட சண்டை” என்றார்.