×

"அழுத்தத்திற்கு அடிபணிய விஜய் ஒன்றும் இபிஎஸ் இல்லை"- மாணிக்கம்தாகூர்

 

முதல்வர் விஜய் என்ன எடப்பாடி பழனிசாமியா. அழுத்தம் கொடுத்தால் பணிந்து போவதற்கு? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மோடி அரசு செயல்படுத்த நினைக்கும், தமிழகத்திற்கு எதிரான தொகுதி மறுவறைவு மசோதாவிற்கு எதிராக இன்று காலை சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “திமுகவின் புதிய நண்பராக பாஜக நெருங்கி வருகிறது. திமுகவின் எண்ணம் என்ன என்பது குறித்த உண்மை இப்போதுதான் வெளியே வருகிறது. பாஜகவுடன் திமுக நெருங்குகிறதா இல்லையா என்பதை மு.க.ஸ்டாலின் தான் தெளிவுபடுத்த வேண்டும். முதலில் ஏமாந்தது ஒபிஎஸ், அடுத்தது இபிஎஸ்...  அடுத்ததாக யார் ஏமாறப் போகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். முதல்வர் விஜய் என்ன எடப்பாடி பழனிசாமியா? அழுத்தம் கொடுத்தால் பணிந்து போவதற்கு? யாராவது ஆதரவாக ஓட்டு போட்டால் அவர்கள் தான் எட்டப்பர். அன்புமணியும், தான் எட்டப்பர் என்று ஒப்புக்கொண்டார். அதிமுக, பாஜக, பாமகவை தவிர வேறு யார் எட்டப்பர்கள் என்பதை விரைவில் தெரிவிப்போம். அன்புமணியை பொறுத்தவரை பாஜக கொடுக்கும் அசைன்மெண்டை செய்துகொண்டு இருக்கிறார்” என்றார்.