×

"தலையிலிருந்த கொண்டையை மறந்துட்டேனே"- அண்ணாமலையை விமர்சித்த மாணிக்கம் தாகூர்

 

பாஜகவுடன் சம்பந்தம் இல்லாதது போல அண்ணாமலை பேசி வருவது வியப்பாக உள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

அண்ணாமலையின் முதல் மாநாடு குறித்து பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், புதிய இயக்கம் தொடங்குவதிலும் மாநாடு நடத்துவதிலும் தவறில்லை என்று கூறினார். ஆனால், அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் தொடர்பே இல்லாதது போல காட்ட முயற்சிப்பது ஆச்சரியம் என்றும், வடிவேல் நகைச்சுவையை மேற்கோள் காட்டி "கொண்டையை மறைக்காமல் விட்டுட்டாரே" என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,முதலமைச்சர் விஜய் நேர்மையான ஆட்சியை கொடுக்கணும்னு நினைக்குறாரு.. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி தான் நேர்மையான ஆட்சியாக இருந்தது.. அதற்கு அப்பறோம் நேர்மையான ஆட்சி கிடையாது என்றார்.