×

“திமுகவும், தவெகவும் ஒன்றிணைவது தவறில்லை”- மாணிக்கம்தாகூர்

 

திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம்தாகூர், “திமுகவும் தவெகவும் ஓரணியில் இருக்க வேண்டும் என்ற திருமாவின் பேச்சு வரவேற்கதக்கது. திருமாவளவன் பார்வை என்பது தொலைநோக்கு பார்வை. கேரளம் மாதிரி பாஜகவை எதிர்க்க தவெக - திமுக தயாராக வேண்டும். கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் நேர் எதிராக இருந்தாலும் பாஜக எதிர்ப்பில் ஒற்றுமையாக இருக்கிறோம். இதுபோன்று தமிழ்நாட்டில் உருவாக வேண்டும். அதற்கு இரு கட்சிகளும் தயாராக இருக்க வேண்டும். திருமா சொல்வது தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான். அந்த அரசியலை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். திமுகவும், தவெகவும் ஒன்றிணைவது தவறில்லை” என்றார்.