"பாஜகவின் ஏஜென்ட் போல ஆளுநர் செயல்படுகிறார்" - மாணிக்கம் தாகூர்
தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற துறை தலைவர்கள் கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல்கள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், “ஆளுநர் ஏதும் கூட்டணி குறித்து பேசிக்கொண்டு இருக்கிறாரா...? இந்தச் செய்தி மிகவும் வினோதமாக உள்ளது. ஆதாரமற்ற பொய்கள் வெறும் 'Allegation' ஆகத்தான் இருக்கும். ஆளுநர் பாஜகவின் ஏஜென்ட் போல செயல்படுகிறார். டெல்லி சென்று வந்த பிறகு ஆளுநரின் போக்கு மாறியுள்ளது. ஆளுநர் அர்லேகர், பாஜக மாநில தலைவரை விட ஒருபடி மேலே சென்றுவிட்டார். அவர் தமிழகத்தில் ஒரு மாதிரியும், கேரளாவில் ஒரு மாதிரியாகவும் நடக்கிறார். பாஜகவில் ஆள் இல்லாததால் ஆளுநரே கட்சி தொண்டர்போல் செயல்படுகிறார். இலங்கை கடற்படை ஒரு குறிப்பிட்ட இனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த கடற்படையின் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைத்திருக்க, அதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார்.