R.S. பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார் - மாணிக்கம் தாகூர்
உள்ளாட்சித் தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் ஆர்.எஸ்.பாரதி இனி அரைமீசை பாரதி என்றே அழைக்கப்படுவார் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கிண்டலாக கருத்து தெரிவித்தார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர், “தி.மு.கவின் அகங்காரம், ஆணவத்திற்கு தான் மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள். ஆனால் மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்ளும் மனபக்குவம் திமுகவினருக்கு இல்லை. 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் R.S.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்.. ஆனால் அவருக்கு அரை மீசை நல்லா இருக்காது. பரந்தூர் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது தவெகவின் நிலைப்பாடு. மின்வாரிய ஊழல் மற்றும் ஹார்ட் டிஸ்க் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அமைச்சர் கீர்த்தனாவின் வெளிநாட்டு பயணம் மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஆந்திராவிற்கு சென்றது குறித்து தவறான பிம்பத்தை உருவாக்க நினைக்கின்றனர்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல அவரை சார்ந்தவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு..பாரதிராஜாவின் சேவையை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. இண்டியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்று இருப்பதால் எங்களுக்கு மதிப்பு அளிக்கும் கட்சிகளுக்கு நாங்களும் மதிப்பு அளிப்போம்” என்றார்.