“வார்த்தை விளையாட்டு வேண்டாம்’’- திருமாவுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்
தற்போது எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் வேலையில்லா பட்டதாரிகள், அவர்களுக்கு குறைகூறுவது மட்டுமே முக்கிய பணி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தி.மு.கவை மறைமுகமாக சாடினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “அமைச்சரவையில் இடம்பெற்றதாலேயே தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாக சொல்ல முடியாது என திருமாவளவன் கூறுகிறார். த.வெ.க தலைமையில் இன்னும் கூட்டணி அமையவில்லையா..? அன்று நடந்தது தோழமை கட்சிகளின் கூட்டம் தான்.. வார்த்தை விளையாட்டுகள் வேண்டாம்.. ஆட்சியில் பங்கு பெற்றாலே அது தோழமை நிலைப்பாடு தான்.. அதாவது அமைச்சரவையில் இடம்பெற்றாலே அதில் நீங்களும் ஒரு அங்கம்தான். வார்த்தை விளையாட்டு வேண்டாம். தற்போது எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் வேலையில்லா பட்டதாரிகள், அவர்களுக்கு குறைகூறுவது மட்டுமே முக்கிய பணி. தவெக தலைமையில் நல்ல கூட்டணி அரசு அமைந்திருக்கிறது. இந்த ஆட்சியை சோபா மாடல் ஆட்சி என எதை சொன்னாலும் நாங்கள் எங்கள் பணிகளை செய்து வருகிறோம்.
ஆட்சி அமைய ஆதரவு கொடுத்தது ஆதரவு நிலை. அமைச்சரவையில் இடம்பெற்றது தோழமை நிலை. அடுத்த நிலை கூட்டணி அமைக்கும் நிலை. இதில் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே ஆதரவு நிலையோடு நிற்கிறார்கள். காங்., விசிக, முஸ்லீம் லீக் தோழமை நிலையில் இருக்கிறோம். அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வோம்” என்றார்.