×

“அமித்ஷாவின் அனுமதியுடன், மோடியின் ஆசீர்வாதத்துடன்! Plan B is ready  for Tamilnadu”- மாணிக்கம் தாகூர்

 

பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம். கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் அதே பழையதா? என அண்ணாமலை தொடங்கி உள்ள புதிய கட்சி குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாணிக்கம்தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா? அமித் ஷாவின் அனுமதியுடன், மோடியின் ஆசீர்வாதத்துடன், BJP மற்றும் RSS பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி. பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம். கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் அதே பழையதா? தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான “Plan B” ஆக இது உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது

தமிழ்நாடு கடந்த காலத்திலும் அரசியல் வேடமாற்றங்களை அடையாளம் கண்டுள்ளது. இனியும் பெயர் மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தையே மக்கள் மதிப்பிடுவார்கள். முகமூடி மாறலாம். ஆனால் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதுதான் முக்கியம். Plan B is ready  for Tamilnadu.  RSS behind it . Beware of them .” எனக் குறிப்பிட்டுள்ளார்.