☰
×

"அண்ணாமலையை போன்று பிழைப்பில்லாமல் புதிய கட்சியை நான் துவங்கவில்லை"- மாணிக்கம் தாகூர் 

 

அண்ணாமலையை போன்று பிழைப்பில்லாமல் புதிய கட்சியை நான் துவங்கவில்லை.. என்னைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம்தாகூர் கூறியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், "அண்ணாமலையை போன்று பிழைப்பில்லாமல் புதிய கட்சியை நான் துவங்கவில்லை.. என்னைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது. கூட்டணி கட்சி என்ற முறையில் தவெக அரசுகக்கு ஆதரவளிப்பது எனது கடமை. மரணமடையும் வரை காங்கிரஸ் கட்சியில் தான் நான் இருப்பேன். தவெக எங்களுடைய கூட்டணி கட்சி, அவர்களுடன் கூட்டணி ஆட்சியில் இருக்கிறோம். எந்த முடிவாக இருந்தாலும் தவெக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு கொடுப்பது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் எனது கடமை. அதைதான் ராகுல்காந்தியும் சொல்லியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் தவெகவுக்கு அதிகமாக முட்டுக் கொடுக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்துவிடலாம். அதுதான் அவருக்குச் சரியாக இருக்கும். தமிழகத்தில் முருக பக்தர்களுக்குக் காங்கிரஸ் கட்சி பாடம் எடுக்க வேண்டாம். அவர் பேசும் ஒவ்வொரு கருத்துக்கும் அந்தக் கட்சியைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை எதிர்க்கருத்துக் கூறி வருகிறார். -

திருப்பரங்குன்றம் ஊர் முறைப்படி, அப்பகுதி மக்கள் உச்சிப்பிள்ளையார் கோவிலில்தான் தீபம் ஏற்றுகிறார்கள். 300 ஆண்டுகளாக அப்படித்தான் நடைபெற்று வருகிறது. பாஜகவும் இந்து முன்னணியும் ராமரை வைத்து வட இந்தியாவில் அரசியல் செய்வதுபோல, பிழைப்பு இல்லாமல் இங்கு முருகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். முருகன் இந்த அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எல்லா மதம், ஜாதியினருக்கும் சார்ந்தவர்” என்றார்.