☰
×

"தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் பணப்பெட்டியோடு அலைகிறார்கள்"- மாணிக்கம்தாகூர் 

 

உலகம் முழுவதுமே விலைவாசி ஏறி உள்ளது தமிழ்நாட்டில் மட்டும் விலைவாசி ஏறி உள்ளது எனக் கூறுவது புரளி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், "திமுக தலைவர் ஸ்டாலினும் உதயநிதியும் தவெக அரசு நீண்டகாலம் நீடிக்காது என்று கூறிவந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாது. எவ்வளவு பணம் கொட்டினாலும் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது. இந்த அநீதிக்காக பாஜகவினர் வெட்கித் தலைகுனிய வேண்டும். காவிரி உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. குற்றமே நடக்காத சமூகம் ஃபின்லாந்தில் வேண்டுமானால் உருவாக்கலாம். 

தமிழகம் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் விலைவாசி அதிகரித்துவிட்டது. அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப் தோற்றதற்குக் காரணமே விலைவாசிதான்; ஈரான் மீதான தாக்குதலாலும், மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகளில் நடக்கும் பிரச்சினைகளாலும் 20% முதல் 30% வரை விலைவாசி அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டை விட்டு அடுத்த ஊர் சென்றாலும் இதே நிலைதான். ஆனால், தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் பணப்பெட்டியோடு அலைகிறார்கள். எவ்வளவு  பணம் கொட்டினாலும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க முடியாது. ஊழல் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றன. தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேச முயற்சிக்கின்றனர். ஆட்சியைக் கவிழ்க்கும் சதியை முறியடிப்போம்" என்றார்.