“ரொம்ப பேசாதீங்க அண்ணாச்சினு அப்போவே சொன்னோம்”- மாணிக்கம் தாகூர்
Jul 3, 2026, 19:35 IST
திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், “மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசியல்வாதிகள் போல் தமிழகத்திலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி தமிழக மக்களை வஞ்சிக்கக்கூடாது. வாஷிங்மிஷின் பற்றி பேசுபவர்கள், அவர்கள் பின்னால் நிற்பவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை பார்க்க வேண்டும். இதுக்குதான் ரொம்ப பேசாதீங்க அண்ணாச்சினு அப்போவே சொன்னோம்.. அனிதா ராதாகிருஷ்ணன் அதிகார மமதையில் பேசினால் இப்படிதான் ஆகும்” என்றார்.