×

“ஆ.ராசா பேசுறது வடிவேல் காமெடி மாதிரி இருக்கு.. வாய் இருந்தால் வடை சுடலாமா? காவல்துறை இஞ்சினே ரிப்பேர் ஆகி நிக்கிது...”- மாணிக்கம் தாகூர்

 

பள்ளி, கல்லூரி, கோயில் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என முதல்வர் அறிவிக்கும்போது அனைவருமே வரவேற்றோம். ஆனால் அடைக்க உத்தரவிட்ட பின்னர் அடைக்காமல் இருப்பதற்கு காரணம் தேடுவது சரியல்ல என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். 

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “எந்த காலக்கட்டத்திலும் தமிழ்நாட்டின் உரிமைகளை காங்கிரஸ் விட்டுக்கொடுக்காது.. இதற்காக எந்த விலையும் கொடுக்க தயார்.இன்னைக்கு பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்ளாததற்கு மேகதாது அணை விவகாரம் குறித்து டி.கே சிவக்குமார் பேசிய பேச்சு தான் காரணம் தமிழ்நாட்டு உரிமைக்காக எந்த விலையும் கொடுக்க கட்சி தயாராக இருக்கிறது. அமித்ஷாவிடம் அனுமதி பெற்று புதிய கட்சி தொடங்குவேன் என அண்ணாமலை கூறுவது நகைச்சுவை. அண்ணாமலை வீராதி வீரராக இருந்தால், ராஜினாமா செய்துவிட்டு, பாதயாத்திரை சென்றிருக்கலாம். பள்ளி, கல்லூரி, கோயில் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என முதல்வர் அறிவிக்கும்போது அனைவருமே வரவேற்றோம். ஆனால் அடைக்க உத்தரவிட்ட பின்னர் அடைக்காமல் இருப்பதற்கு காரணம் தேடுவது சரியல்ல.

ஆ.ராசா பேசுறது வடிவேல் காமெடி மாதிரி இருக்கு.. வாய் இருந்தால் வடை சுடலாமா? திருமா அண்ணன் பெருந்தன்மையோடு நடந்துக்கொண்டுள்ளார். காவல்துறை இஞ்சினே ரிப்பேர் ஆகி நிக்கிது... நீங்க ஓட்டுன விதத்தின் விளைவு தான் அப்படி.. நீங்களே இப்படி சொன்னா எப்படி ராசா அண்ணா?...  இந்த வீர வசனம்லாம் அப்போ எங்க போச்சி?.. இந்த கேள்வியை எல்லாம் அண்ணன் ஆ.ராசா 5 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால் , இந்த நிலை வந்திருக்காது... இது Structural Problem. instant coffee இல்லை.. 2 நிமிடத்தில் சரி செய்வதற்கு” என்றார்.