ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நவம்பர் 16 முதல் மண்டல கால பூஜை தொடக்கம்..!!
சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டிற்கான மண்டல கால பூஜை விழா வரும் நவம்பர் 16-ஆம் தேதி முதல் விமரிசையாகத் தொடங்குகிறது. இதனையொட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அம்மாநில அரசும் தேவஸ்வம் போர்டும் இணைந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வருகின்றன.
மண்டல கால பூஜையின் முக்கிய நிகழ்வான பிரசித்தி பெற்ற "மண்டல பூஜை" வரும் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மண்டல கால மண்டல பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு வசதி நடைமுறையில் உள்ளது. எனவே, சபரிமலை செல்லத் திட்டமிடும் பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான sabarimalaonline.org மூலம் தங்களின் தரிசனத்திற்கான தேதியையும் நேரத்தையும் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கான, 'ஆன்லைன்' முன்பதிவு வரும் 29-ல் தொடங்குகிறது.சபரிமலையில் கூட்டத்தை ஒழுங்கபடுத்த, 'ஆன்லைன்' முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலம் நவ., 16-ல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு வரும் 29 காலை 10:00 மணிக்கு தொடங்கும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
பக்தர்கள், www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். நிலக்கல்- பம்பை பாதை வழியாக தினமும் 60 ஆயிரம் பேருக்கும், எருமேலி, பெருவழிப் பாதை மற்றும் வண்டிப்பெரியாறு, சத்திரம் பாதையில் தலா 3,000 பேருக்கும் தினமும் அனுமதி வழங்கப்படும். நிலக்கல், எருமேலி வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில், 'ஸ்பாட் புக்கிங்' வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.