பிகாரில் ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயன்ற நபர்: கையைப் பிடித்து இழுத்து சென்ற பயணிகள்!
பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஷிவ்நாராயண்பூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலின் ஜன்னல் வழியாகச் செல்போனைப் பறிக்க முயன்ற நபரைப் பயணிகள் கையைப் பிடித்துப் பிடித்துக் கொண்டதால், அந்த நபர் ரயில் மேடையில் இழுத்துச் செல்லப்பட்டுப் படுகாயமடைந்த பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது.
கிழக்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ஷிவ்நாராயண்பூர் ரயில் நிலையத்தில் பொதுப் பெட்டி (General Coach) ஒன்றில் பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரயில் நிலையத்தை விட்டு ரயில் மெதுவாக நகரத் தொடங்கிய வேளையில், பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் ரயிலின் ஜன்னல் வழியாகப் பயணியின் செல்போனைப் பறிக்க முயற்சி செய்துள்ளார்.
இதைக் கண்டு உஷாரான ஜன்னலோரப் பயணிகள், உடனடியாக அந்த இளைஞனின் கையை இறுகப் பிடித்துக்கொண்டனர். ரயில் வேகம் எடுத்த நிலையிலும் பயணிகள் கையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டதால், அந்த இளைஞன் ரயிலோடு சேர்த்து பிளாட்பாரத்தில் தொங்கியபடியே இழுத்துச் செல்லப்பட்டார்.
நடைமேடையின் முடிவுப் பகுதி வரை இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருகட்டத்தில் பிடி நழுவி அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள், காயமடைந்த அந்த நபரை மீட்டுத் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் ரயிலில் இருந்து திருடனை இப்படிப் பிடித்து இழுத்துச் சென்றது மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்துச் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
At Shivnarayanpur Railway Station, a thief tried to snatch a mobile phone from a moving train and run away, but he was caught and held through the window. https://t.co/uVH1YUkGvd
— Kamran (@CitizenKamran) October 13, 2026
At Shivnarayanpur Railway Station, a thief tried to snatch a mobile phone from a moving train and run away, but he was caught and held through the window. https://t.co/uVH1YUkGvd
— Kamran (@CitizenKamran) October 13, 2026