காதலித்த பெண்ணை கரம் பிடிக்க மறுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை
காதலித்த பெண்ணை கரம் பிடிக்க மறுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். மேலும் அவரது ஜாதி பெயரை கூறி அவரை அசிங்கப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட பெண் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம் கீழ கொண்டையார் கிராமத்தைச் சேர்ந்த விஜய் கிருஷ்ணன் (வயது 29) என்பவர் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கிய ஜோதி அவர்கள் குற்றவாளியான விஜய் கிருஷ்ணனுக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.