சென்னையில் பிட்புல் நாய் கடித்து கீழே விழுந்தவர் பலி
Aug 19, 2025, 20:15 IST
சென்னையில் பிட்புல் நாய் கடித்ததில் நிலைகுலைந்து கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ருக்மணியை அவர் வளர்த்து வரும் அமெரிக்கன் புட்புல் நாய் திடீரென கடித்துள்ளது. அதனை தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுக்காரர் கருணாகரனை நாய் கடித்த நிலையில், தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்ததில், நாயை வளர்த்து வந்த பூங்கொடி என்பவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த நாயை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.
பிட்புல் ரக நாய் பிரான்ஸ் நாட்டில் ஆபத்தான நாய் பட்டியலில் உள்ளது. தடை செய்யப்பட்ட நாய் இனம். குழந்தைகள் உள்ள வீட்டில் பிட்புல் நாய்கள் கடித்து கொதறி உடல்களை அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைத்திருக்கின்றன.