×

வேலூர் அருகே மின்வேலியில் சிக்கி ஒருவர் பரிதாப பலி.. உரிமையாளர் கைது!

சமீப காலமாக விளைநிலங்களில் யானை, பன்றி உள்ளிட்ட விலங்குகள் சேதப்படுத்துவது அதிகமாகி வருகிறது. அதனால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களை காக்க மின்வேலி அமைக்கின்றனர். ஆனால் சட்டப்படி மின்வேலி அமைக்க கூடாது. இதனால் பல உயிரினங்கள் உயிரிழக்க நேரிடுவதால், அரசு இதற்கு தடை விதித்துள்ளது. உயிரை பறிக்கும் இந்த மின்வேலிகளால் மனிதர்கள் கூட உயிரிழக்கும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் மின்வேலி தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே
 

சமீப காலமாக விளைநிலங்களில் யானை, பன்றி உள்ளிட்ட விலங்குகள் சேதப்படுத்துவது அதிகமாகி வருகிறது. அதனால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களை காக்க மின்வேலி அமைக்கின்றனர். ஆனால் சட்டப்படி மின்வேலி அமைக்க கூடாது. இதனால் பல உயிரினங்கள் உயிரிழக்க நேரிடுவதால், அரசு இதற்கு தடை விதித்துள்ளது. உயிரை பறிக்கும் இந்த மின்வேலிகளால் மனிதர்கள் கூட உயிரிழக்கும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் மின்வேலி தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே சட்டவிரோதமாக ராஜேந்திரன் என்பவர் தனது நிலக்கடலை வயலில் மின்வேலி அமைத்துள்ளார். எதிர்பாராத விதமாக அந்த வழியே சென்ற ராஜசேகர், அந்த மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்து சென்ற போலீசார் ராஜசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், மின்வேலி அமைத்த ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.