×

முதலமைச்சர் பெயரில் போலி AI ‘டீப் ஃபேக்’ வீடியோ வெளியிட்ட நபர் கைது

 

தமிழ்நாடு முதலமைச்சர் பெயரில் போலி AI ‘டீப் ஃபேக்’ வீடியோ வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பெயரில் போலி AI ‘டீப் ஃபேக்’ வீடியோ தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தொடர்புடைய பிற நபர்களை கண்டறியும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலி AI வீடியோக்களை உருவாக்குதல் மற்றும் பரப்புதல் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற வீடியோக்களை பொதுமக்கள் பகிராமல், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு  காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர், முனைவர் மகேஷ் குமார் அகர்வால், IPS , அவர்கள் தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை வெகுவாகப் பாராட்டினார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.