நாயை கொடூரமாக அரிவாளால் வெட்டியவர் கைது
மதுரை வெள்ளக்கல் முனியாண்டி கோவில் பாதுகாப்பிற்காக இருக்கும் நாயை அரிவாளால் கொடூரமாக வெட்டிய வாலிபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை வெள்ளக்கல் முனியாண்டி கோயிலில் பூசாரியாக உள்ளவர் செல்வம். இவர் கோயில் பாதுகாப்பிற்காக நான்கு நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரை பாதுகாப்பில் இருக்கும் ஒரு நாய் குறைப்பதால் அந்த நாயை கல்லால் அடிப்பது, அதனால் நாய் துரத்துவதுமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு முனியாண்டி கோவிலுக்கு அருவாளுடன் வந்த முத்துராஜ் திடீரென நாயை வாய், கால் முதுகிலும் மாறி மாறி கொடூரமாக வெட்டி உள்ளார்.
இது குறித்து செல்வம் கேட்டதற்கு நாய் வளர்க்கிறாயா... உன்னையும் இதுபோல வெட்டி கொன்றால் தான் சரிபடும் என மிரட்டி உள்ளார். அப்போது முத்துராஜ் கையில் இருந்த அரிவாளை பிடுங்க முயற்சி செஞ்ச போது செல்வத்தின் முதுகிலும் அரிவாலை திருப்பி வைத்து தாக்கியுள்ளார். அரிவாளால் வெட்டுப்பட்டு காயமடைந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.. தொடர்ந்து மறுநாள் 20 ஆம் தேதி நாயை வெட்டியதை போலீஸாரிடம் சொன்னியாமே... அப்படி எதுவும் சொல்லிருந்தால் உன்னை வெட்டிக் கொல்லாமல் விடமாட்டேன்! "ஒழுங்கா நாயை பார்த்து வச்சுக்கோ... இல்லன்னா நீயும் செத்துருவ" என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செல்வம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரி அடிப்படையில் முத்துராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.