×

கோவை கோவில்கள் மீது தாக்குதல்… சேலத்தில் பதுங்கிய நபர் கைது

கோவையில் கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக சேலத்தில் பதுங்கியிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவை ரயில்நிலையம் விநாயகர் கோயில், டவுன்ஹால் மாகாளியம்மன் கோயில், நல்லாபாளையம் செல்வ விநாயகர் கோயில் என அடுத்தடுத்து ஆறு கோவில்கள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. இந்த கோவில்கள் முன்பு மர்மநபர்கள் டயர் வைத்து எரித்துள்ளனர். இதில் விநாயகர் கோவில் சேதம் அடைந்தது. தமிழகம் முழுவதும்
 

கோவையில் கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக சேலத்தில் பதுங்கியிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவை ரயில்நிலையம் விநாயகர் கோயில், டவுன்ஹால் மாகாளியம்மன் கோயில், நல்லாபாளையம் செல்வ விநாயகர் கோயில் என அடுத்தடுத்து ஆறு கோவில்கள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. இந்த கோவில்கள் முன்பு மர்மநபர்கள் டயர் வைத்து எரித்துள்ளனர். இதில் விநாயகர் கோவில் சேதம் அடைந்தது.

தமிழகம் முழுவதும் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தோடு கஜேந்திரன் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவர் சேலத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சேலம் சென்று அவரை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வருகின்றனர். அவர் யார், எந்த அமைப்போடு தொடர்புடையவர் என்பது பற்றி விவரம் விசாரணையில் வெளிப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.