“தமிழ்நாட்டு மக்களே.. உங்களுக்கு மக்கள் நலனை காக்கும் ஸ்டாலின் வேணுமா?மக்களுக்கு எதிரான மோடி வேணுமா?”- கார்கே
தமிழ்நாட்டு எம்.பி.க்களின் உதவியால் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
ஓசூர் அருகே அந்திவாடி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே பரப்புரையில் உரையாற்றிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, “சமூகநீதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் மகத்தான தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டு எம்.பி.க்களின் உதவியால் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது. எப்போதும் சத்தியத்தின் மீது நம்பிக்கை கொண்ட இயக்கம் திமுக. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசு பணிந்துள்ளது. பிரதமர் மோடியின் கொள்கை என்பது மனுதர்மத்தைத் தூக்கிப்பிடிப்பதுதான். எளிய மக்களிடம் அதிகாரம் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதுதான். மக்கள் பல்வேறு தொல்லைகளை சந்தித்து வரும்போது மோடி வானத்தில் பறந்துகொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களே.. உங்களுக்கு மக்கள் நலனை காக்கும் ஸ்டாலின் வேணுமா?மக்களுக்கு எதிரான மோடி வேணுமா? தமிழ்நாட்டில் சமூகநீதி, சுயமரியாதை கொள்கைகளை முன்னெடுத்து செல்கிற மிகச்சிறந்த தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். பெரியார், அண்ணா, கலைஞரின் மண் தமிழ்நாடு. சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காக மக்களுடன் நிற்பது திமுகவும் காங்கிரசும்தான்” என்றார்.