×

"தவெகவுக்கு பெட்டிப் படுக்கையுடன் செல்ல தயாராகிவிட்டார் வைகோ"- மல்லை சத்யா பேட்டி

 

த.வெ.க பக்கம் செல்வதற்கு பெட்டி, படுக்கையுடன் வைகோ தயாராக இருக்கிறார் என திராவிட வெற்றிக் கழக தலைவர் மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.

சென்னையில் கலைஞர் சிலைக்கு மரியாதை செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திராவிட வெற்றிக் கழக தலைவர் மல்லை சத்யா, “த.வெ.க பக்கம் செல்வதற்கு பெட்டி, படுக்கையுடன் வைகோ தயாராக இருக்கிறார். விஜயை அண்ணாவுடன் ஒப்பிட்டு பார்ப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அல்லு சில்லுகள் என விஜய் கூறுவதில் மதிமுகவும் தான் உள்ளது. திமுக தயவில் 29 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் வைகோ களமாடினார்” என்றார்.