×

கமல்ஹாசன் தலைமையில் பிப்.21ம் தேதி மநீம கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழா 

 

கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழா வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளது. 

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்' என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நாள் பிப்ரவரி 21. வரும் பிப்ரவரி 21 (21-2-2024) நமது மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று நம்மவர் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.