×

பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ள மக்கள் நீதி மய்யம்!

 

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பொதுசின்னம் கேட்டு பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் டார்ச்லைட் சின்னம் பொது சின்னமாக ஒதுக்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் பொது சின்னமாக டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் பொது சின்னம் கேட்டு பெற மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு. பொது சின்னமாக விசில் உள்ளிட்ட 3 சின்னங்களை தேர்வு செய்துள்ள மக்கள் நீதி மய்யம் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளது. விரைவில் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை நேரிலும் அணுக உள்ளது.