×

“ரஜினியும் கமலும் சேர்ந்தாலும் கமல்தான் முதல்வர் வேட்பாளர்” : மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் உறுதி!

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது செயல்பாடு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் கணிசமான வாக்குகளைப் பெறாவிட்டாலும் தொடர்ந்து அடுத்த இலக்கை நோக்கி பயணித்து வருகிறார்.அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் 90 காலகட்டங்களிலிருந்து அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் தான் தன்னுடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்று கூறினார். இதனால் அடுத்த மாதம் ரஜினி கட்சி தொடங்குவது
 

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது செயல்பாடு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் கணிசமான வாக்குகளைப் பெறாவிட்டாலும் தொடர்ந்து அடுத்த இலக்கை நோக்கி பயணித்து வருகிறார்.அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் 90 காலகட்டங்களிலிருந்து அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் தான் தன்னுடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்று கூறினார். இதனால் அடுத்த மாதம் ரஜினி கட்சி தொடங்குவது உறுதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைத்துறை நண்பர்களாகப் பயணித்து வரும் ரஜினி கமல் இணைந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அவர்களது ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இதில் திருப்புமுனையாக மக்கள் நம்மைக்காக எதிர்காலத்தில் இணைவோம் என்று கமல் ஹாசனும், ரஜினிகாந்த்தும் கூறியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் சி. கே. குமரவேல், “ரஜினியும் கமலும் சேர்ந்தாலும் கமல்தான் முதல்வர் வேட்பாளர். ரஜினி கமல் இணைவதே மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட தலைவர்களின் விருப்பம். மக்கள் நீதி மய்யம் ஆன்மீக அரசியலை ஏற்கும். ஆனால் மத அரசியலை ஏற்றுக்காது” என்றார்.