#BREAKING தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
தமிழக உள்துறை சார்பில் இன்று 21.10.2026அன்று முக்கிய IPS பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து முதன்மைச் செயலாளர் கார்த்திக் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 3 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
பொருளாதார குற்றப்பிரிவு (Economic Offences Wing) IG ஆக இருந்த சந்தோஷ் குமார் IPS, தற்போது சிவில் சப்ளை CID, சென்னை IG ஆக மாற்றம். இவர் ரூபேஷ் குமார் மீனா IPS-க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளை CID IG ஆக இருந்த ரூபேஷ் குமார் மீனா IPS, தற்போது திருச்சி மாநகர காவல் ஆணையர் (Commissioner of Police, Tiruchirappalli City) ஆக பதவி உயர்வுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் N.காமினி IPS-க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி கமிஷனராக இருந்த N.காமினி IPS, தற்போது சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். DGP அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு IG (IG Administration, Office of the DGP / Head of Police Force, Chennai) ஆக நியமனம். இவர் A.ராதிகா IPS-க்கு பதிலாக பணியமர்த்தப்பட்டுள்ளார். தீபாவளி நேரத்தில் நடந்துள்ள இந்த முக்கிய IPS மாற்றம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.