நேருக்கு நேர் மோதும் முக்கிய கட்சிகள்!
Mar 28, 2026, 17:42 IST
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கட்சிகளுக்கிடையிலான தொகுதிப் பங்கீடு முடிந்துள்ள நிலையில், அனல் பறக்கும் மோதல்கள் உறுதியாகியுள்ளன.
சோளிங்கர், மயிலாடுதுறை மற்றும் பென்னாகரத்தில் காங்கிரஸும் பாமகவும் நேரடியாக மோதுகின்றன. காட்டுமன்னார்கோவில் மற்றும் திருப்போரூரில் விசிகவுடன் பாமக மோதுகின்றன. தருமபுரி மற்றும் விருத்தாசலத்தில் தேமுதிகவும் பாமகவும் களமிறங்குகிறது. அதுமட்டுமின்றி, 18 தொகுதியில் இரட்டை இலைக்கும் கைக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும் காங்கிரசும் 18 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளில் 18 தொகுதிகளில் காங்கிரஸின் கை சின்னத்திற்கும் இரட்டை இலைக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நேரடி மோதல்கள் தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.