ஆந்திராவிற்கு சென்ற பெரிய முதலீடுகள்! தவெக அரசின் முதல் சறுக்கல்
கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்திற்கு வரவேண்டிய பல பெரிய முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுள்ளது.
தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தொழிற்சாலையை அமைக்க ரூ.15,000 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது இந்நிறுவனம். இந்தத் திட்டம் 45,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் 5,000 நேரடி வேலைகளும், 40,000 மறைமுக வேலைகளும் அடங்கும். ஆனால் இப்போது அந்தத் திட்டம் ஆந்திராவுக்கு நகர்ந்துள்ளது. இதேபோல் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்வதற்காக கடந்த ஆட்சியில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்த Mazagon Dock Shipbuilders Limited (MDL) எனும் நிறுவனம் தற்போது ஆந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அக்னி அஸ்த்ரா எனர்ஜெடிக்ஸ் (Agni Astra Energetics): பாதுகாப்புத் துறை சார்ந்த ₹1,500 கோடி முதலீடு ஆந்திராவிற்குச் சென்றுள்ளது.
ரிலையன்ஸ் (Reliance): சோலார் மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் மேனுஃபேக்சரிங் - ₹51,300 கோடி முதலீடு ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்திற்குச் சென்றுள்ளது.
அதானி (Adani): பம்ப் ஸ்டோரேஜ் ஹைட்ரோ ப்ராஜெக்ட்ஸ் - ₹12,297 கோடி முதலீடு ஆந்திராவிற்குச் சென்றுள்ளது.
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield): மோட்டார் சைக்கிள் உற்பத்தி - ₹2,500 கோடி முதலீடு ஆந்திராவிற்குச் சென்றுள்ளது.
அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres): விரிவாக்கப் பணிகள் ₹5,100 கோடி முதலீட்டில் ஆந்திராவின் ஸ்ரீ சிட்டி (Sri City) அருகே சென்றுள்ளது.
கூகுள் (Google): டேட்டா சென்டர் மற்றும் குவாண்டம் சென்டர் தொடர்பான சுமார் ₹1.5 லட்சம் கோடி முதலீடு ஆந்திராவிற்குச் சென்றுள்ளது.
கிரீன் எனர்ஜி வேவ் (Green Energy Wave): ₹2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம். DRDO திட்டம்: ஓசூரில் அமைய வேண்டிய பாதுகாப்புத் துறை சார்ந்த திட்டம் ஆந்திராவிற்குச் சென்றுள்ளது.
இதன்படி, ஒரே மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 37 ஆயிரம் கோடி முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டது. தொழில்துறை அமைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனங்களிடமும் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களையும் சந்தித்து ஆலோசித்து இருக்க வேண்டும். ஏற்கனவே முதலீடுகளை ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுக்கு பணிகளை தொடங்குவதற்கு உதவியாக இருந்திருக்க வேண்டும். அதைச் செய்ய தவறியதன் விளைவாக 37,000 கோடி முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு சென்றதன் மூலம் வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி அரசின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சங்கங்களை சென்று பார்க்கிறார் , ரீலிஸ் போடுகிறார், பிளாஸ்ட பிளாஸ்ட என்று நடனம் ஆடுகிறார் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்த்துவருகின்றனர். தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக இருந்த பல முக்கிய நிறுவனங்கள், கடந்த சில வாரங்களில் தங்களது முதலீடுகளை ஆந்திராவிற்கு மாற்றியுள்ளன. இது தமிழகப் பொருளாதாரத்திற்கு ஒரு பின்னடைவாகப் அவர் பார்க்கவில்லை .